கோலாலம்பூர், ஜனவரி.29-
பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவ விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் மோதல் நிலவி வரும் சூழலில், பெர்சத்து தலைவர் டான் ஶ்ரீ முஹைதீன் யாசின் இன்று இரவு Ikatan Prihatin Rakyat கூட்டணியின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் உள்ளிட்ட பெரிக்காத்தான் நேஷனல் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இருப்பினும், பாஸ் கட்சி இந்தக் கூட்டணியில் ஓர் அங்கமாக இருந்த போதிலும், அக்கட்சியின் தலைவர்கள் எவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற ஒரு தலைவர் கூறுகையில், "பாஸ் தலைவர்களால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. அதே போல் மேலும் சில கட்சிகளின் தலைவர்களும் வரவில்லை" என்று தெரிவித்தார்.








