Dec 22, 2025
Thisaigal NewsYouTube
DAP யை விட்டு விலகும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்
அரசியல்

DAP யை விட்டு விலகும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்

Share:

டிஏபி யிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநில முதலமைச்சரும், மாநில டிஏபி தலைருமான சியு கோன் யோவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

டாக்டர் இராமசாமியின் விலகலினால், கடந்த மூன்று தவணைக்காலமாக அவர் வகித்து வந்த பிறை சட்டமன்றத் தொகுதி தேர்தலில் டிஏபி க்கு வர வேண்டிய வாக்குகளில் சற்று பாதிப்பு ஏற்படலாம் என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சியு கோன் யோவ் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில டிஏபி வேட்பாளர்கள் பட்டியலில் டாக்டர் இராமசாமி அதிருப்தியுற்று இருப்பதையும் சியு கோன் யோவ் சுட்டிக்காட்டினார்.

டிஏபி யிலிருந்து விலகுவதாக டாக்டர் இராமசாமியிடமிருந்து கிடக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவரை இன்று காலையில் தாம் கேட்டுக்காண்டதாக பினாங்கு முதல்வர் குறிப்பிட்டார்.

டாக்டர் இராமசாமியின் விலகலினால் பக்காத்தான் ஹராப்பானுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவில் சரிவு ஏற்படுமா? என்று கேட்ட போது, பாதிப்பு இருக்கிறது என்பதை சியு கோன் யோவ் ஒப்புக்கெண்டார்.

காரணம், டாக்டர் இராமசாமி, தமக்கென்று தனி ஆதரவை பினாங்கில் கொண்டு இருக்கிறார். அதில் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்று சியு கோன் யோவ் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு