Oct 24, 2025
Thisaigal NewsYouTube
மூடா கட்சியின் தேர்தல் குழு இயக்குநராக வி.கே.கே. ராஜசேகரன் தியாகராஜன் நியமனம்
அரசியல்

மூடா கட்சியின் தேர்தல் குழு இயக்குநராக வி.கே.கே. ராஜசேகரன் தியாகராஜன் நியமனம்

Share:

டிச.10-

மலேசிய அரசியலில் இளையேர்களின் சக்தியை முன்வைத்து தொடங்கப்பட்ட மூடா கட்சியின் தேர்தல் அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் நடைபெறவிருகிறது.

மூடா கட்சித் தொடங்கப்பட்டதிலிருந்து நடைபெறும் முதலாவது கட்சித் தேர்தல் இதுவாகும்.

மூடா கட்சியின் தேர்தலை வழிநடத்துவதற்கு தேர்தல் நடவடிக்கைக்குழு இயக்குநராக முன்னாள் அரசியல் தலைவரும், தொழில் அதிபருமான டத்தோ வி.கே.கே. தியாகராஜனின் புதல்வர் வி.கே.கே. ராஜசேகரன் தியாகராஜனை கட்சியின் அரசியல் பிரிவு நியமித்துள்ளது.

மூடா கட்சியின் பேரா மாநில தலைவரான வி.கே.கே. ராஜா என்ற ராஜசேகரன் தியாகராஜன், இங்கிலாந்தில் முன்னணி பல்கலைக்கழகமான Hertfordshire பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றவர் ஆவார்.

வர்த்தக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவராக விகேகே ராஜசேகரன், விகேகே வர்த்தக குழுமத்தின் தலைமைசெயல் முறை அதிகாரியாக பொறுப்பில் இருந்து வருகிறார்.

பல்வேறு சமூக அமைப்புகளில், வர்த்தக அமைப்புகளில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் ராஜசேகரன், நிறுவன விஷயங்களிலும், சட்ட அம்சங்களிலும் பரந்த அனுபவம் கொண்டுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை முன்நிறுத்தி, தொடங்கப்பட்ட மூடா கட்சியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப, வெளிப்படையாக, நம்பக்தன்மையுடன், கட்சியின் அமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி ராஜசேகரன் தேர்தலை வழிநடத்துவார் என்று மூடா கட்சி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு தேர்தல் நடவடிக்கைக்குழு இயக்குநர் என்ற முறையில் ராஜசேகரனுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கட்சி உறுப்பினர்களை மூடா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னாள் தலைவரும், மூவார் எம்.பி.யுமான Syed Saddiq Abdul Rahman- னால் தொடங்கப்பட்ட மூடா கட்சி தேர்தலில் தலைவர் பதவி உட்பட மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான 25 முக்கியப் பதவிகளுக்கு போட்டி நடைபெறும்.

அதேவேளையில் உச்சமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, ஒவ்வொரு மாநிலத்திலும் , கூட்டரசு பிரதேசத்திலும் நாடாளுமன்ற அளவில் கட்சித் தேர்தல் நடைபெறும் என்று மூடா தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

Related News