புனிதமான மலாய்க் கட்சியாக விளங்கும் அம்னோவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால், விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில், அனைத்து அம்னோ உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் அமார் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போதைய இக்கட்டனான சூழலைக் காணும் போது, அன்னோவால் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் பாதுகாக்க முடியாது என்று டத்தோ முகமட் அமார் குறிப்பிட்டார்.
தற்போது 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் வேளையில், அம்னோ மேலும் வீழ்ச்சி அடையும் என்றும், பெரிக்காத்தான் நேஷ்னலில் உள்ள தலைமைத்துவத்துடன் ஒப்பிடும் போது அது நிச்சயம் வீழ்ச்சி அடையும் என்றும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


