Sep 24, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் பெர்மாய் புயல் பாதிப்பு: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது ஷஃப்வான் நேரில் ஆய்வு; உடனடி சீரமைப்புக்கு நடவடிக்கை
அரசியல்

புக்கிட் பெர்மாய் புயல் பாதிப்பு: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது ஷஃப்வான் நேரில் ஆய்வு; உடனடி சீரமைப்புக்கு நடவடிக்கை

Share:

புக்கிட் பெர்மாய் சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது ஷாப்வான் அனி, தாமான் மேவாவின் ஜாலான் செலெண்டாங் 13 பகுதியில் வீசிய கடுமையான புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த இயற்கை சீற்றத்தினால் பல வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதுடன், தொலைத்தொடர்பு கோபுரங்கள் சரிந்து விழுந்து குடியிருப்புப் பகுதிகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் முகமது ஷாப்வான் அனி தெனாகா நேஷனல் பெர்ஹாட் , மலேசிய தொடர்பு, பல்லூடகம் ஆணையமான எம்.சி.எம்.சி, டெலிகாம் மலேசியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட முகமது ஷாப்வான் அனி , இந்தச் சோதனையான கட்டத்தைக் கடக்க அவர்கள் மனவலிமை பெற வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகக் கூறினார். மேலும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அடுத்தகட்ட உதவிகளைச் சீரமைக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Related News