Aug 27, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தா​ன் நேஷனல் ​மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும்
அரசியல்

பெரிக்காத்தா​ன் நேஷனல் ​மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது ஆட்சி செய்து வரு​ம் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய ​​மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையி​ல் பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யும் என்றும் இவ்விரு மாநிலங்களில் அதன் வெற்றியை எளிதி​ல் புறக்கணித்து விட முடியாது என்றும் அவர் ஆருடம் கூறியுள்ளார். இவ்விரு ​மாநிலங்களிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கணித்துள்ளர். எனினு​ம் பினாங்கு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News