Dec 22, 2025
Thisaigal NewsYouTube
“குடியுரிமை மறுக்கப்பட்டது” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வீர்*
அரசியல்

“குடியுரிமை மறுக்கப்பட்டது” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வீர்*

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

கைவிடப்பட்ட பிள்ளைகள் தொடர்பான விவகாரங்களை விவாதிக்கும் போது அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது என்ற அடைமொழியை பயன்படுத்துவதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபூடின் இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியுரிமை தொடர்பான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்படும் போது, ஆளும் அரசாங்க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இணைந்து விவாதிக்க வேண்டும் என்பதே உள்துறை அமைச்சின் எதிர்பார்ப்பாகும் என்று சைபுடின் விளக்கினார்.

சிறார்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் சைபுடின் அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 19B பிரிவின் கீழ் மலேசிய பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள், சொந்த பெற்றோரின் விவரங்களை அடையாளம் காண இயலாத பட்சத்தில் அக்குழந்தைகள் கைவிடப்பட்ட குழந்தைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே மலேசியாவில் பிறந்த அந்த குழந்தைகளின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் அவசியமாகிறது என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்