Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் ஒரு நிலையான ஆட்சி அமைய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள்!" - ரெப்பாவில் எஸ். வீரப்பன் உருக்கமான வேண்டுகோள்
அரசியல்

மீண்டும் ஒரு நிலையான ஆட்சி அமைய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள்!" - ரெப்பாவில் எஸ். வீரப்பன் உருக்கமான வேண்டுகோள்

Share:

நடப்பு மாநில அரசாங்கத்தை தற்காத்துக்கொண்டால் மட்டுமே மலாய்க்காரர்கள் மட்டுமின்றி சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்கும் இன்னும் அதிகமான அனுகூலங்களையும், நன்மைகளையும் பெற்றுத் தர முடியும் என்று ரெப்பா தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.

கடந்த 12 நாட்களாக ரெப்பா தொகுதியில் வீடு வீடாக சென்று தாங்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தில், பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்கார வாக்காளர்களின் ஆதரவு சற்று அதிகரித்து இருப்பதைப் போல் தெரிகிறது. இதற்கு காரணம், பக்காத்தான் ஹராப்பான் அரசில், வார்கா எமாஸ் போன்ற மூத்தக் குடிமக்களுக்கான திட்டங்களில் மக்கள் அதிக நன்மை அடைந்து இருப்பதாக அவர்கள் நேரடியாக தங்களிடம் கூறியதை அறிய முடிகிறது என்று வீரப்பன் விவரித்தார்

"இந்தத் தேர்தல், ஒரு சாதாரணத் தேர்தல் அல்ல. மாநில மக்கள் கண்டிப்பாக நடப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்; ஏனெனில், இது மிகச் சவாலான ஒரு தேர்தலாகும். எனவே, ரெப்பா தொகுதி மட்டுமின்றி, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களின் முழு ஆதரவைத் தந்து, அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று இத்தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளருடன் நேரடிப் போட்டியை எதிர்கொள்ளும் வீரப்பன் மிக உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்