Aug 28, 2026
Thisaigal NewsYouTube
17 புதிய தொகுதிகள் சேர்ப்பதில் தாமதமானால் 82 தொகுதிகளுடனே சரவாக் தேர்தல் – அபாங் ஜொஹாரி அறிவிப்பு
அரசியல்

17 புதிய தொகுதிகள் சேர்ப்பதில் தாமதமானால் 82 தொகுதிகளுடனே சரவாக் தேர்தல் – அபாங் ஜொஹாரி அறிவிப்பு

Share:

கூச்சிங், ஜூலை.05-

17 புதிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் ஒப்புதல் வழங்கவில்லை என்றால், அடுத்த சரவாக் மாநிலத் தேர்தல் தற்போதுள்ள 82 தொகுதிகளுடனே நடைபெறும் என்று சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி ஒப்பேங் தெரிவித்துள்ளார்.

வரும் 2027 -ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலத் தேர்தலை நடத்த வேண்டியுள்ள நிலையில், சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் தொகுதி மறுவரையறை நடைமுறைகளை தேர்தல் ஆணையம் நிறைவு செய்ய முடியாவிட்டால், புதிய 17 தொகுதிகள் சேர்க்கப்படாமல் போக வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை சட்ட நடைமுறைகளின் படி சுமார் 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும் என்றும், தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணையை மாநில அரசு முழுமையாக மதித்து செயல்படும் என்றும் அபாங் ஜொஹாரி அறிவித்துள்ளார்.

Related News