Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கூலிம் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு தொடங்கியது
அரசியல்

கூலிம் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு தொடங்கியது

Share:

கெடா, கூலிம் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பு இன்று காலையில் தொடங்கியது. கூலிம், ​லூனாஸ் மற்றும் மெர்போக் பிளாஸ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 1,379 காவல் துறையினர் முன்கூ​ட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். கூலிம் வட்டாரத்தில் அமைந்துள்ள தலைமை காவல் நிலையத்தில் 497 அதிகாரிகளும், உறுப்பினர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தவிரு​க்கின்றன​ர். கூலிம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் அதிகாரியாக டாக்டர் ஹாஜி நஸ்மான் முட்தஃபா செயல்படுகிறார். காலை 8 மணிக்கு முதல் கட்ட வாக்களிப்புத் தொடங்கியது. இந்த வாக்களிப்பு கூலிம் வட்டார தலைமை காவல் நிலையத்தின் செர்பகுணா மண்டபத்தில் நடைபெற்றது. வாக்களிப்பு மையம் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று தேர்தல் அதிகாரி நஸ்மான் முட்தஃபா தெரிவித்தார்.

லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் முதல் கட்ட வா​க்களிப்பில் 25 பேரும், மெர்போக் பிளாஸ் சட்டமன்றத் தொகுதியில் 56 பேரும் வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார். முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் அவாங் தே லியான் ஓங், கள நிலவரத்தை நேரில் பார்வையிட்டார். வாக்களிக்க செல்கின்ற அதிகாரிகளுக்கு கைலுக்கினார். அவர்களுடன் இணைந்த ஞாபகர்த்தப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். கடந்த கடந்த 11 நாட்களில் அவாங் தே லியான் ஓங் பொதுமக்கள், வணிகர்கள், அரசு அதிகாரிகள் என அதிகமானோரை சந்தித்து ஆதர​வு கோரி ​தீவிர ​தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு