பெர்சத்து மற்றும் கட்சியுடன் இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் ஓர் அங்கமாக விளங்கும் கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டொமினிக் லாவ், பாஸ் கட்சி ஏற்பாடு செய்த செராமாவில் விரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அந்த குற்றச்சாட்டை டொமினிக் லாவ் மறுத்துள்ளார்.
பினாங்கு, சுங்கை டுவாவில் நேற்று இரவு பாஸ் கட்சி ஏற்பாடு செய்த செராமாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபடவில்லை என்றும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை சந்திக்க சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இரவு 9 மணியளவில் அப்துல் ஹாடி அவாங்கை சந்திப்பதற்கு நேரம் குறிக்கப்பட்டு இருந்ததது. ஆனால், இரவு 10.30 மணி வரை அப்துல் ஹாடி அவாங் காணப்படவில்லை. எனவே அந்த நிகழ்வில் அரசியல் உரை ஏதும் நிகழ்த்தாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தம்மை பாஸ் கட்சி விரட்டி அடிக்கவில்லை என்றும் டொமினிக் லாவ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்தவொரு அழைப்பும் இல்லாமல் டொமினிக் லாவ் அந்த செராமாவிற்கு வந்ததால் பாஸ் ஆதரவாளர்கள் அவரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


