பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் நடவடிக்கை அறையில் பன்றித் தலை வைக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நெகிரி செம்பிலான், கோல பிலா, ஜுவாசே சட்டமன்றத் தொகுதியின் பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் நடவடிக்கை அறையில் பன்றித்தலை இன்று காலை 8.30 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டதாக அந்ததொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் எடின் சியாஸ்லி ஷித் தெரிவித்தார்.
இந்த உணர்ச்சிகரமான விவகாரத்தில் யாரையும் சுட்டிக்காட்டி, இவர்கள்தான் இந்த வேலையை செய்து இருப்பார்கள் என்று குற்றஞ்சாட்ட முடியாவிட்டாலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று கோல பிலா முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமான எடின் சியாஸ்லி குறிப்பிட்டார்.








