Jun 28, 2026
Thisaigal NewsYouTube
இன அறிக்கைகள்: நஜ்வானின் தலைவிதி முடிவு செய்யப்படும்
அரசியல்

இன அறிக்கைகள்: நஜ்வானின் தலைவிதி முடிவு செய்யப்படும்

Share:

பி எஸ் எம் கட்சியை ஒரு "இந்திய எஸ்டேட் கட்சி" என்று புலனக் குழு ஒன்றில் கூறியதற்காக பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் கோதா அங்கெரிக் சட்டன்ற உறுப்பினருமான முகாமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்திருக்கும் நிலையில், அவரின் கூற்று ஓர் இனத்தை இழிவுப் படுத்து வகையில் அமைந்துள்ளதால் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பீகேஆர் கட்சியின் ஒழுக்கு வாரியம் முடிவெடுக்கும் என அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஓர் அரசியல்வாதி என்ற முறையில் இனதுவேஷ தன்மையிலான அத்தகைய கருத்தை முகமட் நஜ்வான் ஹலிமி வெளியிட்டுள்ளத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்று தனது நிலைபாட்டை டத்தோ ஶ்ரீ அமிருடின் வெளிப்படுத்தினார். சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேரு சட்டமன்றத் தொகுதியில் பி எஸ் எம் கட்சியின் தொழிலாளர் பிரிவு போராட்டவாதி 42 வயது சிவரஞ்சனி மாணிக்கம் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சி நேற்று அறிவித்து இருந்தது.

மேரு தொகுதியில் ஓர் இந்தியப் பெண்ணான சிவர​ஞ்சனியை தனது வேட்பாளராக நிறுத்துவது மூலம் பி எஸ் எம் கட்சி, இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளதாக முகமட் நஜ்வான் ஏளனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

இன அறிக்கைகள்: நஜ்வானின் தலைவிதி முடிவு செய்யப்படும் | Thisaigal News