கோலாலம்பூர், நவ. 26-
ட்ரோன்களைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட 55 முயற்சிகள் இதுவரை முறியடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தாப்பா மற்றும் அலோர் ஸ்டார் சிறைச்சாலைகளில் இது தீவிரமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் எந்த ட்ரோனும் அகப்படவில்லை என இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது சைபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
“ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி போதைப் பொருட்கள் வீசப்படுகின்றன, இதனை முறியடிக்க அண்டி ட்ரோன் சாதனம் நம்மிடம் இருக்க வேண்டும்.
அந்த வகையில் போதைப்பொருள்களை கடத்துதற்கு பயன்படுத்தப்படும் ட்ரோன்களை அழிக்க நம்மிடம் சிறப்பு குழு உள்ளது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.








