கோலாலம்பூர், ஜன.27-
முஸ்லீம்களை தாம் மதம் மாற்றம் செய்வதாக குறிப்பிட்டத் தரப்பினரால் வேண்டுமென்றே கட்டவிழ்க்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை கண்டு தாம் பெரிதும் வருத்தம் கொள்வதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார்.
Becoming Hannah: A Personal Journey என்ற தலைப்பில் தாம் எழுதிய நூல் தொடர்பில் கூறுகையில் சிகாம்புட் எம்.பி.யான ஹான்னா இயோ மேற்கண்டவாறு கூறினார்.
இது போன்ற குற்றச்சாட்டு 2017 ஆம் ஆண்டு முதல் பரப்பப்பட்டு வருவதாக கூறிய அவர், இத்தகைய அவதூறு குற்றச்சாட்டு, அடிப்படையற்றது என்றும் / அறிவுக்கு பொருந்தாததாகும் என்றும் / ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
தாம் அவ்வாறு மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் போலீஸ்துறையும் தம்மை விட்டீருப்பார்களா? என்று ஹன்னா இயோ கேள்வி எழுப்பினார்.
தமக்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டைக் கண்டு தாம் சலிப்படைந்து விட்டதாக கூறிய ஹன்னா இயோ, தற்போது இதே குற்றசச்சாட்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.