கோத்தா கினபாலு, நவம்பர்.13-
சபா மாநிலத்தின் வருவாயில் 40 விழுக்காட்டுத் தொகையை அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்து இருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு, பதவி விலகிய முன்னாள் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் எவோன் பெனடிக் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சபாவின் 40 விழுக்காடு வருவாய் தொடர்பில் கூட்டரசு அரசிலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகிறது என்று பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் அளித்துள்ள விளக்கத்திற்காக அவரைப் பாராட்டுவதாக எவோன் பெனடிக் குறிப்பிட்டார்.
ஆனால், பிரதமர் இந்த விளக்கத்தைத் தந்தப் பின்னரும் அந்த தீர்ப்பு தொடர்பாக சில அம்சங்கள் குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்து இருப்பது கேள்வி எழுப்புவதாக உள்ளது என்று சபா மாநிலத்தின் UPKO கட்சியின் தலைவருமான எவோன் பெனடிக் தெரிவித்துள்ளார்.








