அடுத்த மாதம் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்துள்ள பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் தங்களுக்கு இடையிலான கருத்துவேறுபாடுகளை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டு, வெற்றி ஒன்றே பிரதானம் என்ற சுலோகத்தை தாங்கி நிற்கின்றன என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ செரி அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இரு கூட்டணிகளுக்கு இடையில் ஒருவருக்கொருவர் சந்தேகமோ, அதிருப்தியோ இல்லை. தொகுதி ஒதுக்கீட்டில் அவை மனநிறைவு கொண்டுள்ளன. தொகுதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் கூட்டணியின் தலைமைத்துவத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
தமது முன்னாள் சட்டமன்றத் தொகுதியான பத்துகேவ்ஸ், சுங்ஙை துவாவில் தேர்தல் கேந்திரத்தை முடுக்கி விடும் நிகழ்வில் உரையாற்றுகையில் அமிருடின் ஷாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
