Oct 28, 2025
Thisaigal NewsYouTube
WCE எனப்படும் மேற்குக் கடற்கரை நெடுஞ்சாலை கட்டுமானம்
அரசியல்

WCE எனப்படும் மேற்குக் கடற்கரை நெடுஞ்சாலை கட்டுமானம்

Share:

நவம்பர்- 10

Banting முதல் Gelang Patah வரை நிர்மாணிக்கப்பட உள்ள WCE எனப்படும் மேற்குக் கடற்கரை நெடுஞ்சாலை கட்டுமானம், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப்பணி அமைச்சின் துணை அமைச்சர் Ahmad Maslan இந்தக் கட்டுமானம் குறித்து பேசுகயில், WCE கட்டுமானம் குறிப்பிட்டப் பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்கும் மேம்பாட்டுக்கும் உதவக்கூடும் என்று கூறினார்.

WCE நெடுஞ்சாலையானது தெற்கு நோக்கி Pahat, Tanjung Pi,ai, Gelang Patah ஆகிய வட்டாரங்களை இணைக்கும். அந்த பகுதிகளில் சாலைகள் நான்கு வழிகளாக மாறக்கூடும் என்று அவர் கூறினார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பயணிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாற்று வழியாக WCE நெடுஞ்சாலை இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டிருந்தார்

, இந்த திட்டம் சம்பந்தப்பட்டப் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்திற்கு உதவக்கூடும் என்று அந்தோணி லோக் கூறினார்.

2025 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் WCE Banting - Gelang Patah திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம், அறிவித்திருந்தார்.

Related News