Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் கூட்டணிக்கு பாஸ் தலைமை வகிக்க முகைதீன் யாசின் நிபந்தனையின்றி ஒப்புக் கொண்டார்: பாஸ் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் அறிவிப்பு
அரசியல்

பெரிக்காத்தான் கூட்டணிக்கு பாஸ் தலைமை வகிக்க முகைதீன் யாசின் நிபந்தனையின்றி ஒப்புக் கொண்டார்: பாஸ் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.06-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு பாஸ் கட்சியானது தலைமை வகிக்க டான் ஶ்ரீ முகைதீன் யாசின் நிபந்தனையின்றி ஒப்புக் கொண்டதாக பாஸ் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவித்துள்ளார்.

பெர்சாத்து கட்சியின் தலைவரான முகைதீனுக்கும், கூட்டணித் தலைவர்களுக்குமிடையே நடைபெற்ற பல சந்திப்புகளுக்குப் பிறகு, பாஸ் கட்சி தலைமை ஏற்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவானது வரும் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டத்தில் உறுதிச் செய்யப்படும் என்றும் துவான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், கூட்டணியை நிர்வகிப்பதற்கான அதிகாரம் தலைவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், தொடர்ச்சியான பிரச்சினைகள் உச்ச மன்றத்தின் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதையும் துவான் இப்ராஹிம் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், கூட்டணிக்கு பாஸ் கட்சி தலைமை தாங்குவதற்கான காரணம், அதன் நாடாளுமன்ற பலம் மற்றும் அது தற்போது ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் துவான் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரான முகைதீன் யாசின், பெர்லிஸ் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த அவரது ராஜினாமாவிற்குப் பிறகு, அவரது தலைமையிலான பெர்சாத்து கட்சி, பாஸ் கட்சியிடமிருந்து மாநிலத் தலைமைப் பொறுப்பை கைப்பற்றியது.

இதனால் இரு கட்சிகளுக்கிடையே பதட்ட நிலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!