ஷா ஆலாம், ஜூன்.16-
அம்னோவில் ஓர் உறுப்பினராக இணைந்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ ஸுல்கிஃப்லி அஹ்மாட், கட்சியில் நேர்மையின் குரலாக விளங்குவார் என்று அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் ஸர்காஷி வர்ணித்துள்ளார்.
எந்தவோர் உயர் பதவியோ அல்லது சலுகையோ கோராமல் சந்தடியின்றி, அம்னோவுடன் தனது வாழ்வை பிணைத்துக் கொண்டுள்ள ஸுல்கிஃப்லி அஹ்மாட் வரவு, அம்னோவை மிளிரச் செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
அம்னோவில் ஓர் உறுப்பினராகச் சேர்வதற்கு ஸுல்கிஃப்லி அஹ்மாட் பெரிய தலையை நாடவில்லை. மாறாக, ஒரு கிளையின் தலைவரை அணுகியுள்ளார். பின்னர் டிவிஷன் தலைவரை நாடியுள்ளார். இதுவே ஸுல்கிஃப்லி அஹ்மாட்டின் தனித்துவமானச் சிறப்பாகும் என்று புவாச் ஸர்காஷி தெரிவித்துள்ளார்.