வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகள் கேட்டு மஇகா விண்ணப்பித்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் அது குறித்து தேசிய முன்னணி தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மஇகா திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விவரத்தை விக்னேஸ்வரன் வெளியிடவில்லை.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் ஈஜோக், சுங்கை துவா மற்றும் செந்தோசா ஆகிய தொகுதிகளிலும், கெடா மாநிலத்தில் லூனாஸ் மற்றும் புக்கிட் செலம்பாவ் ஆகிய தொகுதிகளிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெரம் பாடாங் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய தொகுதிகளில் மஇகா
போட்டியிட்டது. இவற்றில் ஜெரம் பாடாங் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளில் மஇகா தோல்விக் கண்டது.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


