கோலாலம்பூர், டிசம்பர்.07-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான பொருத்தமான வேட்பாளர்களை இறுதிச் செய்யும் பணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், அவர் தான் தயார் செய்த பட்டியலை ஒற்றுமை அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவையில் ஒரு சிறிய மறுசீரமைப்பு இருக்கும் என்பதை அன்வார் உறுதிப்படுத்தினார். இருப்பினும் இறுதி முடிவு தனது அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தான் அவசரப்பட விரும்பவில்லை என்றும், அனைத்துத் தலைவர்களின் கருத்துகளையும் மதித்த பின்னரே, விரைவில் காலியிடங்களை நிரப்புவதற்கான முடிவை எடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.








