கோத்தா கினபாலு, நவம்பர்.27-
சபா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 29 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சபா மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்குவதற்கு ஆளுநர் துன் மூசா அமான் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாநில அரசு செயலாளர் டத்தோ ஶ்ரீ சஃபார் உந்தோங் தெரிவித்தார்.








