Aug 16, 2026
Thisaigal NewsYouTube
  நெகிரி செம்பிலான்: பக்காத்தான் ஹராப்பான் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அமினுடின் ஹரூண்
அரசியல்

நெகிரி செம்பிலான்: பக்காத்தான் ஹராப்பான் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அமினுடின் ஹரூண்

Share:

கடந்த 2018 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் நிகழ்த்தியுள்ள மக்கள் நலச் சாதனைகளை மாநில இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் நேற்று பட்டியலிட்டுள்ளார்.

அதன் படி, "நிலையானது - செழிப்பானது - உள்ளடக்கியது" என்ற இலக்கோடு மக்களின் ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திற்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வி, மாணவர் , சமூக நலம், மருத்துவ உதவி உட்ப மக்கள் நலன் சார்ந்த விவரங்களையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 200 ரிங்கிட் மானியம் மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி கற்றல் வசதிகள்.

• உயர்கல்வி ஆரம்ப மானியமாக படிப்புக்கு ஏற்ப 500 முதல் 1,000 ரிங்கிட் வரை நிதியுதவி.

• மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக 1,500 ரிங்கிட் மற்றும் மாதந்தோறும் 200 ரிங்கிட் உதவித்தொகை.

• மூத்த குடிமக்களுக்கு 200 ரிங்கிட், புதிய தம்பதியருக்கு 500 ரிங்கிட் திருமண ஊக்குவிப்பு நிதி.

• சிறு தொழில்முனைவோருக்கு 3,000 ரிங்கிட் மற்றும் ஏழை எளியோருக்கு 85,000 ரிங்கிட் மதிப்பிலான வீட்டுமைப்புத் திட்டம்.

• எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு 2.4 மில்லியன் ரிங்கிட் மற்றும் ஹீமோடயாலிசிஸ் சிகிச்சைக்கு 1.9 மில்லியன் ரிங்கிட் மருத்துவ நிதி ஒதுக்கீடு.

• மக்கள் முன்னெடுப்புத் திட்டங்களுக்கு 681 மில்லியன் ரிங்கிட் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு 28.7 மில்லியன் ரிங்கிட் செலவு.

• சாலை மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 497 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

• கடந்த 7 ஆண்டுகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக 33,697 மலிவு விலை வீடுகள் அமைப்பு.

என நெகிரி செம்பிலான் மாநில மக்களின் நல்வாழ்வை உறுதி செய்துள்ள இந்தச் சாதனைகளும் செழிப்பான வளர்ச்சியும், "ஹராப்பான் தொடரட்டும்" என்ற முழக்கத்துடன் மேலும் நீடிக்கும் என டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

Related News

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து