அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் டிஏபி வேட்பாளர்களின் பெயர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் பினாங்கு துணை முதலமைச்சரும்,பிறை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 தவணைக்காலம் சிறப்பான முறையில் சேவையாற்றியவருமான டாக்டர் பி.இராமசாமி, வேட்பாளர் பட்டியலிருந்து விடுபட்டுள்ளார்.
இந்திய சமூகத்தின் இனமான போராட்டவாதியான 74 வயது டாக்டர் இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ஊடகங்கள் இன்று கோடிகாட்டியுள்ளன.
கடந்த 2008 ஆம் ஆண்டு 12 ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் கெராக்கான் தலைமையிலான 39 ஆண்டு கால பாரிசான் நேஷனல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்களிப்பு வழங்கிய டிஏபி தலைவர்களில் ஒருவரான டாக்டர் இராமசாமி, பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் பிறை சட்டமன்றத் தொகுதியிலும் ஏகக்காலத்தில் நின்று, இரு தொகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்று, பினாங்கில் டிஏபி ஆட்சி நிறுவப்படுவதற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.
மலேசிய வரலாற்றில் இந்திய ஒருவர், மாநிலம் ஒன்றுக்கு முதல் முறையாக துணை முதலமைச்சராக பதவியேற்ற வரலாற்றை பதிவு செய்தவரான டாக்டர் இராமசாமி, 3 தவணைக்காலம் தற்காத்து வந்த பிறை சட்டமன்றத் தொகுதியில் மற்றொரு இந்திய வேட்பாளர் நிறுத்தப்படவிருக்கிறார்.
எக்கோ வேர்ல் டெவெலப்மென் குருப் பெர்ஹாட்டின் முன்னாள் துணை தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ எஸ்.ராஜு என்பவர், பிறை சட்டமன்றத்தொகுதியில் டிஏபி வேட்பாளராக நிறுத்தப்படவிருக்கிறார் எ ன்று ஊடகங்கள் கோடிகாட்டியுள்ளன.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


