Jul 20, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், ஜூலை.19-

ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் உடன் இணைந்து செயல்படுவதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் உள்ள பாரிசான் அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, பாரிசான் நேஷனல் தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, நெகிரி செம்பிலானில் பாரிசான் - பெரிக்காத்தான் கூட்டணி ஒரு "சோதனை முயற்சி" என்றும், அது 16-வது பொதுத் தேர்தலிலும் தொடரக்கூடும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பக்காத்தான் இளைஞர் பிரிவு, சாஹிட்டின் இந்த முயற்சி ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசானின் உறுதிப்பாட்டில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்கத்தில் துணைப் பிரதமர் உட்பட பல்வேறு முக்கிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டும் கூட, பாரிசான் கூட்டணியானது, பக்காத்தான் கூட்டணியை மதிக்கவில்லை என்பது சாஹிட்டின் அறிக்கையில் தெளிவாகத் தெரிவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், 2023-ஆம் ஆண்டு, பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில், தேர்தலுக்குப் பிறகு, பாரிசானுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளும் வழங்கப்பட்டதை நினைவூட்டிய இளைஞர் பிரிவு, பாரிசானின் தற்போதைய நடவடிக்கை கூட்டணி நம்பிக்கைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்