Jun 25, 2026
Thisaigal NewsYouTube
மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்
அரசியல்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

Share:

மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களில் சுமார் 95 விழுக்காட்டினர், அக்கட்சியானது பாரிசான் நேஷனல் கூட்டணியில் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் ஜர்க்காஷி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த நிலைப்பாடு குறித்து தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு இருக்கும்படியும், மஇகா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் -ஐ அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், இது சரியான முடிவு என்றும், கடந்த மாதம் பாரிசானின் தலைமை ஆலோசனை முகாமில் மஇகா கலந்து கொண்டதே, அது பாரிசானுடன் தொடர்வதற்கான ஆரம்ப அறிகுறி என்றும் புவாட் ஜர்க்காஷி தெரிவித்துள்ளார்.

Related News