Sep 28, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றம் கலைந்ததும் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் வெளியேறும் - ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்
அரசியல்

நாடாளுமன்றம் கலைந்ததும் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் வெளியேறும் - ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

Share:

நாடாளுமன்றம் கலைக்கப்படும் தருணத்துடன் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் நேஷனல் விலகும் என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை மட்டுமே பாரிசான் ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது மாமன்னருக்கு அளித்த வாக்குறுதி என்றும், ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்தபோது நாங்கள் அளித்த உறுதிப்பாடும் இதுவே என்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 18-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய ஸாஹிட் ஹாமிடி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பதால், பாரிசான் அதன் அரசியல் அடையாளத்தையோ நிலைப்பாடுகளையோ கைவிட்டுவிட்டதாக அர்த்தமல்ல என்றும் ஸாஹிட் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “பாரிசான் இன்னும் அதே பாரிசான்தான்” எனக் குறிப்பிட்ட அவர், தேசிய அளவிலான ஒப்பந்தம் மற்றும் மாநில அளவிலான அரசியல் ஒத்துழைப்பு இரண்டும் வேறுபட்டவை என விளக்கமளித்துள்ளார்.

அதன் படி, மாநில அளவில் ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடலாம் என்பதையும், வெவ்வேறு அரசியல் அணிகளுடன் இணைந்து செயல்படலாம் என்பதையும் ஸாஹிட் சுட்டிக் காட்டியுள்ளார்.

முன்னதாக, ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் விரைவில் வெளியேற வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News