நவம்பர்- 10
நாட்டில் அதிகரித்து வரும் இளையோர் கர்ப்பம், குழந்தைத் திருமணம், சிசுவைக் கைவிடுதல், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளைப் பற்றி, மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சர், Datuk Seri Nancy Shukri கவலை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரப்படி, கடந்த 5 ஆண்டுகளில் 44,263 இளையோர் கர்ப்பச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், 17,646 சம்பவங்கள் திருமணமாகாத இளையோரைச் சேர்ந்தவை. குறிப்பாக சரவாக் மாநிலத்தில் 2019 முதல் 2023 வரை 9,258 இளையோர் கர்ப்பச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 5,627 திருமணமாகாதவர்களாகும் என அவர் தகவல் வெளியிட்டார்.
இந்த நவீன யுகத்தில், இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கவனத்தில் கொண்டு, பாலியல் கல்வி விவாதங்கள் மதிப்புணர்வோடு நடத்தப்பட வேண்டும். அவ்வாறான விவாதங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார் நான்சி.








