Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பாரம்பரியம் நமது வேர்; தொழில்நுட்பம் நமது வலிமையான சிறகு" – அமைச்சர் ரமணனின் உகாதி திருநாள் வாழ்த்துச் செய்தி
அரசியல்

பாரம்பரியம் நமது வேர்; தொழில்நுட்பம் நமது வலிமையான சிறகு" – அமைச்சர் ரமணனின் உகாதி திருநாள் வாழ்த்துச் செய்தி

Share:

'ஸ்ரீ பரபாவ நாம சம்வத்சர' எனும் தெலுங்குப் புத்தாண்டு மலரும் இவ்வேளையில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், நமது தொன்மையான பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத் திறன்களோடு இணைப்பதன் அவசியத்தை ஆழமாக வலியுறுத்தியுள்ளார்.

உகாதி திருநாளின் முக்கியத்துவமான 'புத்துயிர் பெறுதல்' - 'வாழ்க்கைச் சமநிலை' ஆகியவற்றை வெறும் சடங்குகளாக மட்டும் பார்க்காமல், நமது இந்தியச் சமூகம் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்க உதவும் ஒரு உந்துசக்தியாக மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரு பெரிய குடும்பம் என்பதை அமைச்சர் ரமணன் தனது செய்தியில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

"தெலுங்குச் சமூகம் மற்றும் மலேசிய இந்தியச் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளும் ஒரே குடும்பமாக, ஒரே குரலாக எழ வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நமது அடையாளமான பண்பாட்டு வேர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அதே சமயம் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த சக்தியாக முன்னேற வேண்டிய தருணம் இது," என்று அவர் தனது உரையில் விவரித்தார்.

இந்தியச் சமூகத்திற்காக இன்னும் பல பிரம்மாண்டமான திட்டங்கள் தற்போது தீவிரமாக வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ரமணன் இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார்.

"தாமதிப்பதற்கான நேரம் கடந்துவிட்டது. இந்தியச் சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதரும் 'வெற்றி' பெறுவதை உறுதி செய்வதே எனது தொடர்ச்சியான கடப்பாடாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

Related News