Oct 24, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்
அரசியல்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.24-

கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகமான ஊடகவியாளர்கள் வருகை தருவர் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

இதன் மூலம் உபசரணை நாடு என்ற முறையில் மலேசியா ஏற்பாடு செய்துள்ள 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவிருக்கிறது என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

ஜப்பானிலிருந்து மட்டும் அதிகமான ஊடகவியலாளர்கள் வருகை தரவிருக்கின்றனர். அந்த நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 300 ஊடகவியலாளர்கள் வருகை புரியவிருப்பதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்புத்துறை அமைச்சின் வாராந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபாமி இதனைத் தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு திமோர் லெஸ்டே பிரதமர் Kay Rala Xanana Gusmao இன்று மதியம் 12.15 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் Kompleks Bunga Raya- வை வந்தடைந்தது மூலம் மலேசியாவிற்கு வருகை தந்துள்ள முதலாவது வெளிநாட்டுத் தலைவராக விளங்குகிறார் என்று ஃபாமி குறிப்பிட்டார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊ... | Thisaigal News