பினாங்கில் பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் அரசியல் நிகழ்வில் அக்கட்சி அங்கத்துவம் பெற்றுள்ள பெரிக்காத்தானின் நேஷனலின் உற்ற சகாவான கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டொமினிக் லௌ, விரட்டப்பட்ட சம்பவம், அந்த கூட்டணியில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒரு பாடமாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலில் பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய மூன்று உறுப்புக்கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை, இரவு 9 மணியளவில் பினாங்கு, சுங்கை டுவா வில் பாஸ் கட்சியின் இந்த மாபெரும் அரசியல் நிகழ்வில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உட்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பாயான் லெப்பாஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கெராக்கான் கட்சித் தலைவர் டோமினிக் லாவ், அந்த நிகழ்வில் பாஸ் கட்சிப் பொறுப்பாளர்களால் தாம் விரட்டப்படவில்லை என்று மறுத்து வருகிறார். ஆனால், பாஸ் கட்சியின் தலைவர்கள் அமர்ந்து இருக்கும் மேடைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி, டோமினிக் லாவை பாஸ் கட்சியின் பினாங்கு மாநில செயலாளர் இஸ்சுரீ தடுத்து நிறுத்தியது மற்றும் அவரை ஓரங்கட்டச் செய்தது தொடர்பான காணெளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தங்கள் கண் முன்னாள் டொமினிக் லாவ் ஓரங்கட்டப்பட்டதை பாஸ் கட்சித் தலைவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
அவமானத்தின் மத்தியில் எதுவும் நடவாது போல புன்னகைத்தவாறு காணப்பட்ட டொமினிக் லௌ, வேறு வழியின்றி, கூட்டத்தின் மத்தியில் யாரையோ தேடுவது போல அங்கிருந்து மெதுவாக நகரும் காட்சி தொடர்பான காணெளி, சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளது.

அரசியல்
பாஸ் கட்சி நிகழ்ச்சியில் டோமினிக் லாவ் விரட்டப்பட்ட சம்பவம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒரு பாடம்
Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


