Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

Share:

பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவம் தனது தோல்விகளை மறைப்பதற்காக, மலேசிய சங்கங்களின் பதிவாளர் அலுவலகமான ஆர்ோஎஸ்ஸின் பங்கை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் சிறுமைப்படுத்தக்கூடாது என்று பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் தனது நடவடிக்கைகளை சங்கங்கள் சட்டம் 1966 மற்றும் கூட்டணியின் அரசியலமைப்புக்கு ஏற்ப நடத்துமாறு ஆர்ஓஎஸ் பலமுறை எழுத்துப்பூர்வமாக நினைவூட்டியதாக அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, பெரிக்காத்தான் நேஷனல் புதிய தலைமைத்துவத்தால் கூட்டணியின் அரசியலமைப்பு மீறப்பட்டதாகக் கூறி, பெர்சத்து ஆர்ஓஎஸ்-இடம் புகார் அளித்ததாகவும் அஸ்மின் தெரிவித்தார்.

ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தில் பெர்சத்துவுக்கு கலந்து கொள்ளவும், கருத்துத் தெரிவிக்கவும், வாக்களிக்கவும் உரிமை மறுக்கப்பட்டது அந்தக் கூட்டணியின் அரசியலமைப்பை மீறிய செயல் என்றும் அவர் கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனல் மீது ஆர்ஓஎஸ் எடுத்த நடவடிக்கைக்கு அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் கூறியிருந்த நிலையில், அதனை அஸ்மின் மறுத்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து

அன்வாரின் விமர்சனத்தை நிராகரித்த நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

அன்வாரின் விமர்சனத்தை நிராகரித்த நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்