மலாக்கா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பாரிசான் நேஷனலுடன் பேச்சு நடத்த பக்காத்தான் ஹராப்பான் இன்னும் ஆர்வமாக இருப்பதாக அதன் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அதேவேளை, பெர்சத்துவுடன் பேச்சு நடத்துவது உட்பட அனைத்து வாய்ப்புகளும் திறந்தே இருப்பதாக அவர் கூறினார்.
அமானா தகவல் பிரிவு தலைவர் காலிட் சமாட், பாரிசான் நேஷனலுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்று முன்னதாகக் கூறியிருந்த நிலையில், அது அவரது தனிப்பட்ட கருத்து என அமானா மலாக்கா தலைவர் அஷ்ரஃப் முக்லிஸ் மிங்ஹாட் தெரிவித்தார்.
மலாக்காவில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் பெர்சத்து தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ பேச்சு எதுவும் நடைபெறவில்லை என பக்காத்தான் ஹராப்பான் தகவல் பிரிவு தலைவர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்தார்.
இதனிடையே, கூட்டணி பேச்சுகள் அடுத்த வாரம் தொடங்கலாம் என்று பாரிசான் நேஷனல் மலாக்கா தலைவர் அப்துல் ரவூப் யூசோ கூறியுள்ளார்.








