Oct 29, 2025
Thisaigal NewsYouTube
இருமொழி பாடத்திட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
அரசியல்

இருமொழி பாடத்திட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், நவ.7-


பள்ளிகளில் இருமொழிப்பாடத் திட்ட அமல் சிறப்பான அடைவுநிலையைக்காட்டியுள்ளதாக கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, எஸ்.பி.எம். தேர்வில் மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதப் பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் சராசரி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க அம்சமாக 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மலாய்மொழிப்பாடத்தில் தேர்ச்சி விகிதம் உயர்வு கண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் இருமொழிப் பாடத்திட்ட வகுப்பு மாணவர்களின் மலாய் மொழி தேர்ச்சி அடைவு நிலை 97 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்லினா சீடேக் குறிப்பிட்டார்.

Related News