Dec 19, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

உள்ளூர் சமூகங்களை நேரடியாக ஈடுபடுத்தும் நாடு தழுவிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது

Share:

ஜன. 19-

2025 ஆம் ஆண்டு ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மலேசியா, "தமக்கு என்ன பயன்?" என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், உள்ளூர் சமூகங்களை நேரடியாக ஈடுபடுத்தும் நாடு தழுவிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. "உள்ளடக்கமும் நிலைத்தன்மையும்" என்ற கருப்பொருளின் கீழ், ஆசியான் கூட்டங்களை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடத்துவதன் மூலம், உள்ளூர் வணிகங்களும் சமூகங்களும் ஆசியான் செயல்பாடுகளில் பங்களிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றன. இதன் மூலம், ஆசியான் மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமானதாகவும், அதன் பயன்கள் பரவலானதாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டார் மலேசிய வெளியிறவு அமைச்சர் Mohamad Hasan.

இந்த முன்னெடுப்பின் மூலம், உள்ளூர் மக்கள் கூட்டங்களுக்கான பொருட்களையும் சேவைகளையும் வழங்குவதன் மூலம் பொருளாதாரப் பயனடைவதுடன், ஆசியானின் பங்கும் அதன் நோக்கங்களைப் பற்றிய புரிதலையும் பெறுகிறார்கள். மலேசியாவின் இந்த அணுகுமுறை, ஆசியானின் பலம் அதன் உள்ளடக்கத்தில் உள்ளது என்பதையும், வட்டார ஒத்துழைப்பானது, உள்ளூர் சமூக மேம்பாட்டையும் நிலையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

Related News