டிச. 11-
ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 308 குடும்பங்களுக்கு கடந்த டிசம்பர் 9, 10 ஆம் தேதிகளில் பிரதமர் அன்வார் இப்ராஹிம், நிவாரணப் பொருட்கள் வழங்கினார். மடானி அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமரின் சிறப்புப் பணியாளர் திரு. சண்முகம் மூக்கன் இந்த முயற்சியை ஒருங்கிணைத்தார்.
இயற்கை சீற்றத்தின் போது , மக்களின் நலன் முன்னுரிமையாகக் கொள்ளப்படுவதை இது உறுதி செய்கிறது. டிசம்பர் 9 ஆம் தேதி தங்காக்கில் 50 குடும்பத் தலைவர்களுக்கு உதவி நிதியும் மறுநாள் டிசம்பர் 10ஆம் தேதி 231 உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டதாக சண்முகம் குறிப்பிட்டார்.
பிரதமர் அலுவலகம், சமூகத் தொடர்புத் துறை J-KOM, மாவட்ட அலுவலகங்கள், மலேசிய கூட்டுறவு ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் ஒவ்வோர் உதவி பெறுநரும் அடையாளம் காணப்பட்டதாக சண்முகம் கூறினார்,
மடானி அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டமும் மக்களின் நலத்தை முன்னிருத்தியே வகுக்கப்படுகிறது.
மக்களின் நலனில் கவனம் செலுத்தும் ஒரு உத்தியாக, இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கப்படும் உதவி பெரும் தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் என்றார் அவர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளில் இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசாங்கம் உறுதியளிப்பதாகவும் சண்முகம் குறிப்பிட்டார்,








