கோலாலம்பூர், நவம்பர்.18-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி 7 நாட்களுக்கு மேற்கொண்டுள்ள ஆப்பிரிக்காவிற்கான அலுவல் பயணம் மலேசியாவிற்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவை மட்டுமின்றி, வியூக ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா மற்றும் கென்யா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையிலான மலேசிய வர்த்தகப் பேராளர் குழுவினர் இன்று பயணமாகியுள்ளனர்.
ஒவ்வொரு பேச்சுவார்த்தை அமர்வும் எளிதாக அமையும் என்பதுடன் இதன் மூலம் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தவும், சந்தை அணுகலை அதிகரிக்கவும், மலேசியாவிற்கு நன்மை தரக்கூடிய புதிய வாய்ப்புகள் திறக்கப்படுவதற்கும் வழி வகுக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








