நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் மற்றும் சில அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் போலீசாரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் சின் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடம் அரசியல் கட்சிகள் மற்றும் ஆதரவாளர்களின் இலக்குக்குரிய பகுதிகளாக அவை இருப்பதால் அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் கோலாலம்பூர் சம்பந்தப்படவில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் ஆதரவாளர்கள் சந்திப்பு மற்றும் ஊர்வலம் நடத்துதற்கு கோலாலம்பூரை ஒரு தளமாக பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


