நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தல் மிக முக்கியத்தவம் வாய்ந்தது என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்ற போதிலும் இச்சட்டமன்றத் தேர்தலை அலட்சியமாக கருதி விட முடியாது என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் திட்டவட்டமாக தெரிவித்தார்.
டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மேற்கண்டவாறு அந்தோணி லோக் பதில் அளித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சியை கைப்பற்றிவிட்டோம் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மெத்தனப் போக்குடன் இருந்து விட முடியாது. 6 மாநிலங்களின் ஆட்சி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாகும். இந்த ஆறு மாநிலங்கள், மத்திய அரசாங்கத்தின் முதுகெலும்பு என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
