Dec 16, 2025
Thisaigal NewsYouTube
47 ஆவது திருமுறை ஓதும் விழா
அரசியல்

47 ஆவது திருமுறை ஓதும் விழா

Share:

செரெண்டா, ஜூன்.23-

மலேசிய இந்து சங்கம், புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையின் 47 ஆ வது திருமுறை ஓதும் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை, செரெண்டா, ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்விமானும், உலு சிலாங்கூர் தொகுதி மூடா கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் R. சிவபிரகாஷ், கலந்து சிறப்பித்தார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார். ஒளவையார் இயற்றிய ஆத்திச்சூடியின் 109 அதிகாரங்கள் மற்றும் திருக்குறளின் 1,330 அதிகாரங்கள் கற்று, அதன்படி வாழ்வை அமைத்துக் கொள்வோமானால் சிறந்த பண்பியலைக் கொண்ட வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முடியும் என்று டாக்டர் சிவபிரகாஷ் தமது உரையில் தெரிவித்தார்.

நமது மாணவர்கள் கல்வியில் சிறக்க நீதிக் கதைகள் மற்றும் அவற்றின் அதிகாரங்கள் வழிகாட்டும் என்பதையும் அவர் விளக்கினார்.

வாழ்க்கைக்கு வழி காட்டு இது போன்ற நன்னெறி அதிகாரங்களை இளம் வயதிலிருந்து பிள்ளைகளுக்குப் போதிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களையும் பிள்ளைகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று நிகழ்விற்கு திரளாக கலந்து கொண்ட பெற்றோர்களை டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

இப்போட்டியில் பங்கேற்றுவர்களுக்கு டாக்டர் சிவபிரகாஷ் பரிசுகளையும் வழங்கி சிறப்பு செய்தார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!