Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

பராமரிப்பு கட்டணம் செலுத்தப்படாதப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Share:

ஜன. 19-

பினாங்கில் PPR Taman Manggis குடியிருப்புப் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் Gate Barrier எனப்படும் தானியங்கி நுழைவு வாயிலும் அணுகல் அட்டை எனப்படும் Access Card முறையை பினாங்கு மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. பராமரிப்பு கட்டணம் செலுத்தப்படாதப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பினாங்கு மாநில சுற்றுச் சூழல், வீட்டு வசதிக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் DATO’ SERI SUNDARAJOO SOMU தெரிவித்தார். இந்த புதிய முறையின் மூலம், குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்புடன் பராமரிப்புப் பணிகள் சிறப்பாக நடைபெறும். 2006-ல் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் 307 குடியிருப்பாளர்கள் உள்ளனர். வாடகைக்கும் பராமரிப்புக்கும் 124 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் 214 பேர் மட்டுமே முறையான ஒப்பந்தம் கொண்டுள்ளதாக சுந்தர்ராஜூ தெரிவித்தார்.

PPR Taman Manggis குடியிருப்பில் வசதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்க்கை அமைய, குடியிருப்பின் தரம் மட்டுமின்றி நிர்வாகமும் முக்கியம். பராமரிப்புக்காக மாநில அரசு அதிக செலவு செய்கிறது. சுத்தம், பாதுகாப்பு, மின்சாரம் மின்தூக்கி போன்ற வசதிகள் பராமரிப்பு கட்டணத்தைப் பொறுத்தது. தற்போது 1 லட்சத்து 77 ஆயிரத்து 521 ரிங்கிட் நிலுவையில் உள்ளது. 2021 முதல் 2024 வரை 2.3 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. புதிய தா தானியங்கி நுழைவு வாயிலும் அணுகல் அட்டை முறையும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 315 ரிங்கிட்டில் முடிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் 3 அட்டைகளும் டோக்கன்களும் வழங்கப்படும். நிலுவைத் தொகையை பிப்ரவரி 1-க்குள் செலுத்தி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் பாதுகாப்பு மேம்படும் நிலுவைத் தொகை சிக்கலும் குறையும் என்று சுந்தரராஜூ கூறினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!