Dec 1, 2025
Thisaigal NewsYouTube
திருக்குறளை முன்வைத்து வாழ்க்கைத் தத்துவத்தைக் கூறினார் அன்வார்
சிறப்பு செய்திகள்

திருக்குறளை முன்வைத்து வாழ்க்கைத் தத்துவத்தைக் கூறினார் அன்வார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

இன்று நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தீபாவளியையொட்டி எஸ்டிஆர் நிதி உதவி முன்கூட்டியே வழங்கப்படும் என்று அறிவித்ததுடன் திருக்குறளை மேற்கோள்காட்டி வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றி கூறினார்.

திருக்குறலின் 115 ஆவது அதிகாரமான கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி என்ற குறளை உவமையாக மேற்கோள்காட்டி அன்வார் பேசியது மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த பாராட்டுகளைப் பெற்றார்.

வாழ்க்கையில் வரும் ஏற்றத் தாழ்வுகள் இயல்பு. அவை தவிர்க்க முடியாதவை. ஆனாலும், அந்த ஏற்றத் தாழ்வுகளிலும் மனதை நிலை குலையாமல், நடுவுநிலையுடன் இருப்பதுதான் சான்றோர்களுக்கு அழகு. இது தமிழ்மொழியின் தொன்மையான அற இலக்கியமான திருக்குறளின் 115வது குறள் ஆகும் என்று அன்வார் கூறிய போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி, தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Related News