Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இந்தியர்களின் அடுத்த 30 ஆண்டு கால இலக்கு என்ன?
சிறப்பு செய்திகள்

இந்தியர்களின் அடுத்த 30 ஆண்டு கால இலக்கு என்ன?

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.22-

மலேசிய இந்தியர்களின் அடுத்த 30 ஆண்டு கால இலக்கு என்ன? கல்வி, சமூகவியல்- பொருளாதாரம், சுகாதாரம், மரபியல் சொத்து ஆகிய நான்கு துறைகளில் அவர்களின் அடைவு நிலை என்ன, அவற்றைச் சாதிப்பதற்கு அவர்கள் ஒருமித்த குரலாக செயல்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் தொடக்கப்பள்ளிக்கு அடித்தளமிட்டது இந்தியர்களின் எழுச்சி கலந்துரையாடல் நிகழ்வு.

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர், சைனீஸ் அசெம்பலி மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை, இந்தியர்களுக்கான எழுச்சி கலந்துரையாடல் நடைபெற்றது.

சமூக ஆர்வலர் எம். சுதன் தலைமையில் போராட்டத்திலிருந்து கொள்கை முழுக்கம், மலேசிய இந்தியர்யர்களின் எதிர்காலத்தை நோக்கி எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி, கல்விமான் டாக்டர் ஆர். சிவபிரகாஷ், பிபிபி கட்சித் தலைவர் டத்தோ லோகபாலா உட்பட பத்து சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு இந்தியர்களுக்கான அடுத்த 30 ஆண்டு காலத் திட்டம் எவ்வாறு அமைய வேண்டும், அதற்கு இந்திய சமூகம் ஒன்றுபட்ட சக்தியாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

கல்விமானும், பொருளாதாரச் சிந்தனையாளருமான டாக்டர் சிவபிரகாஷ் , புள்ளி விவகாரங்களுடன் முன் வைத்த ஆலோசனைகள் பார்வையாளர்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது.

இந்தியச் சமூகத்திற்கு ஆண்டுக்கு 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு தேவை என்று நாம் பேசும் போது, அதில் முக்கிய கேள்வியாது, பணம் எங்கு செல்கிறது என்பது மட்டுமல்ல, அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு சரியான கட்ட அமைப்பு வேண்டும். ஒரு குறுகிய கால உதவியிலிருந்து நீண்ட கால அதிகாரமளிப்புக்கு இந்தியர்களின் கவனம் மாற வேண்டும் டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்

இந்திய சமுதாயத்திற்கான அடுத்த 30 ஆண்டு காலத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையில் அதில் 40 விழுக்காடு அல்லது 200 மில்லியன் ரிங்கிட் கல்வி மற்றும் திவெட் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.

தொழில்முனைவோர் திட்டத்திற்கு 25 விழுக்காடு அடிப்படையில் 125 மில்லியன் ரிங்கிட், இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு 20 விழுக்காடு அடிப்படையில் 100 மில்லியன் ரிங்கிட், கட்டமைப்புக் கொள்கைக்கு 15 விழுக்காடு வீதம் 75 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட வேண்டும் என்று மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவருமான டாக்டர் சிவபிரகாஷ் பரிந்துரை செய்தார்.

Related News

சமூகப் பாலமாகச் செயல்படும் அரசு சாரா இயக்கங்கள்: முதல்வர் பாராட்டு!

சமூகப் பாலமாகச் செயல்படும் அரசு சாரா இயக்கங்கள்: முதல்வர் பாராட்டு!

கேமரன்மலை,  தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

கேமரன்மலை, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்