கோல குபு பாரு, ஆகஸ்ட்.03-
கல்விதான் அழியாதச் செல்வம் என வள்ளுவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில், கோல குபு பாரு வட்டார மாணவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. எதிர்வரும் ஆகஸ்ட் 17 முதல், தாரா அறக்கட்டளை, பெர்சத்துவான் பெர்பாடுவான் உலு சிலாங்கூர், டாக்டர் சிவா பிரகாஷ் அவர்களின் இணை முயற்சியால், அனைத்து தொடக்கப்பள்ளி, இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் முற்றிலும் இலவச டியூஷன் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

திங்கள் முதல் சனி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த வகுப்புகளில், கல்வித் தாகத்துடன் வரும் தேவைப்படும் மாணவர்களுக்கு சுவையான சிற்றுண்டியும் வழங்கப்படும். எண் 22, திங்காட் அத்தாஸ், ஜாலான் டத்தோ மூடா ஜாஃபார், 44000 கோல குபு பாரு, உலு சிலாங்கூர் என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த மையம், உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும்.
கல்வி ஒருவரின் தலையாயச் செல்வம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டிய டாக்டர் சிவா, இந்த அரிய வாய்ப்பை இன்றே பயன்படுத்திப் பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறார்.
பதிவு செய்ய 0163524264 எனும் எண்களில் திரு. ஸ்ரீகாந்த்தையும் 0142363821 எனும் எண்களில் திரு. பவித்ரனையும்
0172723795 எனும் எண்களில் குமாரி சேராவையும் தொடர்பு கொள்ளலாம்.