Oct 11, 2026
Thisaigal NewsYouTube

யுகே FLARE UH விருதில் சாதனை பதிவு செய்த மலேசியாவைச் சேர்ந்த குகன்யா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யுகே FLARE UH விருதில் சாதனை பதிவு செய்த மலேசியாவைச் சேர்ந்த குகன்யா

பிரிட்டன், மே.27-

பிரிட்டன் Hertfordshire பல்கலைக்கழகம் நடத்திய FLARE UH AWARD 2024 நிகழ்வில், மலேசியாவைச் சேர்ந்த குகன்யா சாதனைப் படைத்துள்ளார்.

FLARE UH Award என்பது இளைஞர்களுக்கான தொழில் முயற்சி மற்றும் புத்தாக்க விருதாகும். உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், பல்வேறு புத்தகங்கள், தொழில்முனைவோர் முயற்சிகள் உள்ளிட்டவைக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மலேசியாவைச் சேர்ந்த குகன்யா, தனது Eco-Friendly Trading குறித்த வணிகக் கருத்துடன் பங்கேற்று, பலரை பிரமிக்கச் செய்துள்ளார்.

பழைய துணிகள், பயன்பாட்டின்றி போன பொருட்கள் உள்ளிட்டவற்றை புத்துயிர் ஊட்டும் வகையில் மறு சுழற்சியின் வாயிலாக புதிய வடிவமைப்பில் விற்பனை செய்யும் திட்டமே குகன்யாவிற்கு பெருமை சேர்த்தது.

இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் குகன்யா விளக்கியிருந்தார்.

பல்கலைக்கழகத் தலைவர்கள், தொழில்முனைவோர், அதிகாரிகள் முன்னிலையில் குகன்யாவிற்கு இந்த கெளரவிப்பு வழங்கப்பட்டது. தமக்கு வழங்கப்பட்ட இந்த கெளரவம், பெருமை சேர்க்கிறது என்றும், தம்முடைய ஆலோசனை உலகளாவியச் சந்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்டத்ய் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் குகன்யா குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →