Sep 15, 2026
Thisaigal NewsYouTube
பேரா மஇகா 80-வது பேராளர் மாநாடு: சமூக சேவைக்காக அர்விந்த் அப்பளசாமி கௌரவிக்கப்பட்டார்
சிறப்பு செய்திகள்

பேரா மஇகா 80-வது பேராளர் மாநாடு: சமூக சேவைக்காக அர்விந்த் அப்பளசாமி கௌரவிக்கப்பட்டார்

Share:

பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவரும், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடியின் சிறப்பு அதிகாரியுமான அர்விந்த் அப்பளசாமி, அம்மாநில மஇகா-வின் 80-வது பேராளர் மாநாட்டில் அவரது சமூக சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் கௌரவிக்கப்பட்டார்.

பாகான் டத்தோ தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராகவும், பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் அர்விந்த், தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு, மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்.

வசதி குறைந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது, கல்வி நிதியுதவிகளை வழங்குவது, இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பது எனப் பல்வேறு பொது அமைப்புகளுக்கும் அர்விந்த் நிதியுதவி வழங்கி வருகின்றார்.

அர்விந்த் அப்பளசாமி ஆற்றி வரும் இந்த சமூகச் சேவைகளை பேராக் மாநில மஇகா தலைவர் டான் ஶ்ரீ எம். ராமசாமி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அவரது தொடர் சமூகப் பணிகளும் நிதியுதவிகளும் பேராக் மாநில இந்திய சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News