Sep 6, 2026
Thisaigal NewsYouTube
மிஸ் வோர்ல்ட் 2026 அழகிப் போட்டி: மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாம் ரன்னர் அப் பட்டத்தை வென்றார்
சிறப்பு செய்திகள்

மிஸ் வோர்ல்ட் 2026 அழகிப் போட்டி: மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாம் ரன்னர் அப் பட்டத்தை வென்றார்

Share:

வியட்நாமின் Nha Trang நகரில் நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் 2026 அழகிப் போட்டியில் மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாம் ரன்னர்-அப் பட்டத்தை வென்றார்.

26 வயதான தனுசியா, கடந்த 1998-ஆம் ஆண்டு மிஸ் வோர்ல்ட் போட்டியில் இதே இடத்தைப் பிடித்த லீனா தியோவுடன் இணைந்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற 73-வது மிஸ் வோர்ல்ட் போட்டியில் 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

டோமினிகன் ரிபப்லிக் நாட்டின் Joheirry Mola Dominguez மிஸ் வோர்ல்ட் 2026 பட்டத்தை வென்ற நிலையில், ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னஸ் அலபெர்ன் முதல் ரன்னர்-அப் பட்டத்தைப் பெற்றார்.

அதேவேளையில், பியூட்டி வித் அ பெர்பஸ் என்ற பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் தனுசியா, முதல் ஆறு சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

மேலும், சமூக நலத் திட்டங்களில் போட்டியாளர்களின் பங்களிப்பையும் அதன் தாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்படுகின்றது.

மேலும், கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற்ற ஹெட் டு ஹெட் சேலஞ்ச் நிகழ்ச்சியில் ஆங்கிலம், மலாய், மெண்டரின், மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் தனுசியா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மலேசியர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related News

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை