Sep 14, 2026
Thisaigal NewsYouTube
2026 தேசிய ஐசிடி போட்டி – 650-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
சிறப்பு செய்திகள்

2026 தேசிய ஐசிடி போட்டி – 650-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Share:

2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தித்தியான் டிஜிட்டல் திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஐசிடி திறன்களை வளர்த்து வருகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இலக்கவியல் வாய்ப்புகளை சமமாக்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

12 செப்டம்பர் 2026 அன்று மலேசிய பல்லூடக பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய ஐசிடி போட்டியில், நாடு முழுவதுமிருந்து 650-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளரும் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான மிஷெல் இங் மெய் ஸ்ஸே சிறப்பு வருகை தந்தார்.

வரைதலில் கெடா சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் நிரல்யா சசி குமார் முதலிடம் பெற்றார்.

சிறுவர் நிரலாக்கத்தில் சிலாங்கூர் சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் ஈஷ்வர் குமாரன் முதலிடம் பெற்றார்.

இருபரிமாண அசைவூட்டலில் ஜொகூர் தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளியின் கீர்த்தன் ஆனந்தன், இணையத்தளம் வடிவமைப்பில் கெடா சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் வர்னிகா நோவலன் முதலிடம் வென்றனர்.

ஐசிடி புதிர்போட்டியில் சிலாங்கூர் எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் சி. பிரான்செஸ்கோ பியோ முதலிடம் பெற்றார்.

அதே போல், வரைதல் போட்டியில் அகல்யா கார்த்தி கேசன், அனீஷா ஸ்ரீ நாகேந்திர ராவ்; சிறுவர் நிரலாக்கத்தில் சரண்யா ராதாகிருஷ்ணன், திவ்யதாரணி வேலவன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளில் வெற்றி பெற்றனர்.

இருபரிமாண அசைவூட்டலில் தர்வின் குமார், கார்த்திகேயன் கணேஸ்; இணையத்தளம் வடிவமைப்பில் தருண் மதிவாணன், திவினா சத்தியசீலன்; ஐசிடி புதிர்போட்டியில் ஜி. சம்விதா கௌரி, சவீனேஷ் ராம் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளைப் பெற்றனர்.

இந்நிலையில் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசியத் தமிழ் நுட்பியல் கழகம் இணை ஏற்பாட்டாளர்களாகவும், இலக்கவியல் அமைச்சு உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவாளர்களாகவும் செயல்பட்டன.

பேராசிரியர் முனைவர் மகேந்திரன் நாயர், பேராசிரியர் முனைவர் சாந்தா வைத்தியலிங்கம், முனைவர் ஷார்லினி தியாகராஜா, முனைவர் நபிஹா ஹாஷிம், முனைவர் நவநீதன் சி. அர்ஜுமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு கையடக்கக் கருவிகளும் வழங்கப்பட்டன.

Related News