Jun 25, 2026
Thisaigal NewsYouTube
53 வயதில் ராணி ராமதாசுவின் வரலாற்று வெற்றி: கனவுகளுக்கு ஏது வயது?
சிறப்பு செய்திகள்

53 வயதில் ராணி ராமதாசுவின் வரலாற்று வெற்றி: கனவுகளுக்கு ஏது வயது?

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.11-

கோலாலம்பூரில் நடைபெற்ற Asian Model Icon அனைத்துலகப் போட்டியில், சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான ராணி ராமதாசு மகுடம் சூடி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 19 முதல் 70 வயது வரையிலான சுமார் 18 இளம் போட்டியாளர்களை முந்தி அவர் பெற்ற இந்த வெற்றி, வயது என்பது வெறும் எண்களே என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. ஒரு பகுதிநேர மனிதவள ஆலோசகரான ராணி, "மேடையில் நடப்பதும், தன்னம்பிக்கையுடன் மிளிர்வதும் 50 வயதைக் கடந்த பெண்களாலும் சாத்தியமே" என்பதை இந்த வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அபார வெற்றிக்கு ராணி ராமதாசு சிறுவயதில் மேற்கொண்ட தடகளப் பயிற்சியும் மற்றும் 13 வயதிலிருந்து பயின்ற இந்திய பாரம்பரிய நடனமுமே ஆணிவேராக அமைந்தன. விளையாட்டில் கிடைத்த மன உறுதியும், நடனத்தில் கற்ற நளினமான உடல்மொழியும் அவரை மேடையில் ஒரு முழுமையான ஆளுமையாக வெளிப்படுத்தின. வெறும் மகுடத்திற்காக அல்லாமல், தனது வாழ்நாள் கனவான Runway Walk பயணத்தை நனவாக்கவே அவர் இதில் பங்கேற்றார். சமூகத்தின் வயோதிகம் குறித்த பார்வையை உடைத்து, பல பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு அடையாளமாக ராணி ராமதாசு இன்று உருவெடுத்துள்ளார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!